எச்சரிக்கை! வரும் 4, 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும்!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஒரு நாள், அதுவும் சில மணி நேரங்கள் பெய்த மழைக்கே சென்னை தண்ணீரில் தத்தளித்தது. எனவே, மழை பெய்ய தொடங்குவதால் உரிய முன்னெற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார். மழையை எதிர்கொள்வது எப்படி, மக்களை தங்கவைக்கும் இடம், உணவு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
newstm.in