1. Home
  2. தமிழ்நாடு

எச்சரிக்கை! டெல்டாவை மிஞ்சிய ஒமைக்ரான்… பாதிப்பு அதிகம் இருக்கும்!!

எச்சரிக்கை! டெல்டாவை மிஞ்சிய ஒமைக்ரான்… பாதிப்பு அதிகம் இருக்கும்!!


ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வகை கொரோனா வைரசை மிஞ்சிவிட்டது, ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது என அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபாசி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட முக்கால்வாசி கொரோனா பாதிப்புகள் ஒமைக்ரானால் ஏற்படுகிறது, தினம் தினம் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒன்றரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தினம் தினம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலைமை குறைவாகவே ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தாலும், பொதுமக்கள் அதனை எளிதாக எண்ணி நடந்து கொள்ளக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

எச்சரிக்கை! டெல்டாவை மிஞ்சிய ஒமைக்ரான்… பாதிப்பு அதிகம் இருக்கும்!!

மிக அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை அதிகரிக்கக்கூடும். இப்போதைய சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்று கூறியுள்ள டாக்டர் பாசு அந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க்கில் ஓமைக்ரான் கேஸ்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் பாதிப்பேர் 5 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like