1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி போகணுமா ? ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடக்கம்..!

1

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கட்டண தரிசனம், சர்வ தரிசனம், இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் என பல்வேறு தரிசனங்களின் மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு மூலமூலம் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான திருமலை ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை TTD இன்று வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதத்திற்கான சுப்ரபாத, தோமாலை, அர்ச்சனை, அஷ்டால் பாத பத்மாராதனை சேவைகளுக்கு, ஜனவரி 20ஆம் தேதி காலை 10 மணி வரை லக்கிடிப்பில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

லக்கிடிப்பில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஜனவரி 22ம் தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து கல்யாணோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபாலங்கர சேவைக்கான டிக்கெட்டுகள் ஜனவரி 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

மேலும் மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் ஜனவரி 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி ஆண்டு வசந்த உற்சவம் ஏப்ரல் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது. இதற்கான தரிசன டிக்கெட்டுகள் ஜனவரி 22ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அங்கபிரதட்சன டோக்கன்களின் ஒதுக்கீடு ஜனவரி 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசனம் மற்றும் அறைகளுக்கான முன்பதி வரும் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் வரும் 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு 300 ரூபாய் சிறப்பு கட்டண நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் என்றும் திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு ஜனவரி 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் புதிய இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in/ மூலம் பக்தர்கள் இன்று தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like