1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசு வேலையில் சேர வேண்டுமா?

1

Hindustan Urvarak & Rasayan Limited (HURL) -ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவை இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது.

HURAL நிறுவனத்தின் இந்த ஆட்சேற்ப்பு அறிவிப்பின் (HURAL Recruitment in Tamil) படி பல்வேறு காலுப் பணியிடங்கள் உள்ளன. தலைமை மேலாளர் – 02, மேலாளர் – 20, அதிகாரி – 17, பொறியாளர் – 34, உதவி மேலாளர் – 07 என மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் இந்த HURAL நிறுவனத்தில் உள்ளது.

இந்த ஆண்டு HURL நிறுவனத்தில் காலியாக (HURL Job Vacancy 2024) உள்ள 80 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் முதுகலை டிப்ளமோ/ இளங்கலை பட்டம்/ பொறியியல் பட்டம்/ B.Sc./ M.Sc. / CA / CMA / PGDM / MBA / MSW பட்டம் படித்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்துஸ்தான் உரங்கள் & கெமிக்கல்ஸ் லிமிடெட் (HURAL) நிறுவனத்தில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு (HURL Job Vacancy in Tamil)விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது வரம்பு 30 மேலும் அதிகபட்ச வயது வரம்பு 47 ஆகும். மேலுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் நடைபெறும்.

நேர்காணலில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு பதவிகளுக்கு ஏற்றார்போல் மாதம் சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைகளுக்கான சம்பளம் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. HURL நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு HURL -ன் அதிகாரப்பூர்வ www.hurl.net.in இணையதள பக்கத்தில் (HURL Official Website) பதிவிடப்பட்டுள்ளது.

HURL நிறுவனத்தில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை (21.04.2024 – 20.05.2024) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் jobs.hurl.net.in செய்யவும்.

இந்த 80 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் HURL இணையதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை (HURL Recruitment Ofiicial Notification) முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளவும்.

Trending News

Latest News

You May Like