1. Home
  2. தமிழ்நாடு

இனி விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்துச் செல்லத் தடை..!

Q

லெபனானில் கடந்த மாதம் 17-ந் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அதற்கு அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த 2 சம்பவங்களிலும் 37 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்துச் செல்ல அந்த நிறுவனம் தடைவிதித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துபையிலிருந்து அல்லது துபை வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளைத் தங்களுடன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like