வக்பு சட்டத்திருத்தம் என்பது இன்று அவசியமில்லாத ஒன்று - த.வெ.க கோவை மாவட்ட செயலாளர் சம்பத்குமார்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் அக்கட்சியின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே த.வெ.க கோவை மாவட்ட செயலாளர் சம்பத்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தின் போது த.வெ.க கோவை மாவட்ட செயலாளர் சம்பத்குமார் பேசுகையில் :-
வக்பு சட்டத்திருத்தம் என்பது இன்று அவசியமில்லாத ஒன்று எனவும் இது சிறுபான்மையினருக்கு உண்டான உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை எனவும் பார்ப்பதாக த.வெ.க. கருதவதாக கூறினார். பிளவுவாத அரசியலை தொடர்ந்து மக்களிடையே திணித்து வரும் பாஜக அரசை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார்.
த.வெ.க.வின் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், 28 அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றியம், கிளைகளை சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் என அவர் கூறினார்.