நாளை மாலை 6 மணி வரை காத்திருங்கள் - கூலி படத்தின் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!
நடிகர் ரஜினிகாந்த் -இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் கூலி. அடுத்தடுத்த இளம் மற்றும் அதிரடி இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்தின் 171-வது படமாக கூலி படம் உருவாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் பிரமாண்ட செட் போடப்பட்டு இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்தமாக 160 நாட்கள் ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூலி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் டீசர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. தன்னுடைய முந்தைய படங்களை போல இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்துடன் கூலி படத்தை இயக்கி வருவதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் நாளை (ஆக. 28) மாலை 6 மணியிலிருந்து துவங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
#Coolie Character announcements from tomorrow 6 PM 🔥🔥🔥@rajinikanth sir @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @sunpictures pic.twitter.com/3vL0FECkc0
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 27, 2024