1. Home
  2. தமிழ்நாடு

வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: இன்று கேரளத்தில் பொது விடுமுறை..!

1

எல்லோருக்கும் அரசியல் தலைவராக அறியப்படும் வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) பகல் 3.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 101. இதனையடுத்து, அம்மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆலப்புழாவில் உள்ள அச்சுதானந்தன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை முழுவதும் வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக திருவனந்தபுரத்திலுள்ள ஏ.கே.ஜி சென்டரில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து செவ்வாய்க்கிழமை அவரது உடல் ஆலப்புழாவுக்கு ஊர்வலமாக செடுத்துச் செல்லப்பட்டு ஆலப்புழாவிலுள்ள வலிய சுடுகாடு மயானத்தில் ஜூலை 23-இல் அவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு உடல் எரியூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like