1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு..!

Q

2024 மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது என இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 அன்று தமிழ்நாடு , புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் , நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை சுமார் 11 மணி நேரம் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளது.
வடகிழக்கு மாநிலம் மற்றும் பதற்றமான மக்களவை தொகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவில் இடம் பெற்றுள்ள மொத்த தொகுதிகளில், குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 3 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like