1. Home
  2. தமிழ்நாடு

இன்று கர்நாடகாவில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு..!

1

 கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

சென்னபட்டணாவில் பா.ஜ.க கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் யோகேஷ்வர், சிக்காவியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை, காங்கிரஸ் சார்பில் யாசிர் அகமதுகான் பதான், சண்டூரில் காங்கிரஸ் சார்பில் துகாராம் எம்.பி.யின் மனைவி அன்னபூர்ணா துகாராம், பா.ஜ.க. சார்பில் பங்காரு ஹனுமந்து ஆகியோர் உள்பட 45 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

3 தொகுதிகளிலும் சேர்த்து 7 லட்சத்து 4 ஆயிரத்து 673 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 557 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

Trending News

Latest News

You May Like