செம அறிவிப்பு : இனி SETCல் வால்வோ பேருந்துகள்: பயணிகளுக்கு சூப்பர் வசதி..!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) சமீபத்தில் ஒரு டெண்டர் வெளியிட்டது. 20 புதிய, சொகுசு பேருந்துகளை வாங்குவதற்காக இந்த டெண்டர் விடப்பட்டது. இந்த பேருந்துகள் அனைத்தும் Volvo நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. மற்ற நிறுவனங்கள் பேருந்துகளை கரூரில் அசெம்பிள் செய்யும். ஆனால், SETC முழுமையாக தயாரிக்கப்பட்ட பேருந்துகளையே வாங்க முடிவு செய்துள்ளது.
இந்த பேருந்துகளில் BS-VI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது காற்று மாசடைவதை குறைக்கும் திறன் கொண்டது. மேலும், பேருந்துகளில் ஏர் சஸ்பென்ஷன், பிரேக் போடும்போது வண்டி குலுங்காமல் இருக்க ஆன்டி-பிரேக்கிங் சிஸ்டம், வண்டி நிலை தடுமாறாமல் இருக்க வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. இந்த வசதிகள் அனைத்தும் Volvo பேருந்துகளில் மட்டுமே உள்ளன என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Volvo நிறுவனம் கொடுத்த விலை சரியானதாக இருந்தால், SETC நிறுவனம் பேருந்துகளை வாங்க ஆர்டர் கொடுக்கும். இந்த பேருந்துகள் 51+1 அல்லது 55+1 என்ற இருக்கை அமைப்பில் இருக்கும். அதாவது, 51 அல்லது 55 பயணிகள் உட்காரலாம். கூடவே ஒரு ஓட்டுநர் இருக்கையும் இருக்கும். பேருந்துகளில் அகலமான நடைபாதை, சினிமா தியேட்டரில் உள்ளது போன்ற சொகுசான இருக்கைகள், ஒவ்வொருவரு பயணிக்கும் சார்ஜ் போடுவதற்கு வசதியாக USB போர்ட், AC வென்ட், LED டிவி போன்ற வசதிகள் இருக்கும்.
"தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளிலும் வசதிகள் செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். குறிப்பாக சென்னை-பெங்களூரு, சென்னை-கோயம்புத்தூர் போன்ற முக்கியமான வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படும்" என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இந்த பேருந்துகளில் அடியில் லக்கேஜ்களை வைக்கும் இடமும் இருக்கும். வழுக்காத தரை, Wi-Fi போன்ற வசதிகளும் இருக்கும். இதன் மூலம் தனியார் பேருந்துகளில் செல்லும் பயணிகள் அரசு பேருந்துகளுக்கு வருவார்கள் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
முதலில் 20 பேருந்துகளை மட்டும் வாங்கி சோதனை செய்ய SETC முடிவு செய்துள்ளது. மக்களின் வரவேற்பு மற்றும் பேருந்துகளின் செயல்பாட்டை பொறுத்து, மேலும் பேருந்துகள் வாங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். "பொதுமக்களின் வரவேற்பையும், பேருந்துகளின் செயல்பாட்டையும் பொறுத்து, இதுபோன்ற மேலும் பல ஆர்டர்கள் வரலாம்" என்று அதிகாரிகள் கூறினர்.