1. Home
  2. தமிழ்நாடு

தொண்டர்கள் ஷாக்..! தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Q

சென்னை நீலாங்கரையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இன்று காலை தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலர் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் வல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஒரே நபரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like