தனியே வசித்து வந்த பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மூன்று பெண்களுடன் தனியே வசித்து வந்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.
பெரியமொடச்சூா் பகுதியில் மேரி என்பவர் மூன்று பெண்களுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் மேரியை அடையாளம் தெரியாத நபா் ஒருவர் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். அருகே வசித்து வரும் கணேசன் என்பவா் தாக்குதல் பார்த்து தடுக்கச் சென்றார். அவரையும் அந்த மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த இருவரும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சோ்க்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மேரியை மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மேரி உயிரிழந்தார்.
கணேசன் கோபிசெட்டிபாளையம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கா காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in