வோடாபோன் அதிரடி சலுகை! சனி, ஞாயிறுகளில் கொண்டாட்டம் தான்!
வோடாபோன் அதிரடி சலுகை! சனி, ஞாயிறுகளில் கொண்டாட்டம் தான்!

வோடாபோன் - ஐடியா தற்போது, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி விடுமுறை தினமான சனி, ஞாயிறுகளில் வாடிக்கையாளர்கள் அளவற்ற டேட்டா நன்மைகளை பெறமுடியும்.
இந்த புதிய அக்டோபர் 19, 2020 முதல் ஜனவரி 17, 2021 வரை வழங்கப்படுகிறது. ரூ.249 அல்லது அதற்கு மேற்பட்ட அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை உள்ள தினங்களில் பயன்படுத்தப்படாத அனைத்து டேட்டாவையும் வார இறுதி நாட்களில் பயன்படுத்த முடியும். ஆனால், அவை வார இறுதி முடிந்ததும் காலாவதியாகும் என்பது குறிப்பிடதக்கது.
உதாரணத்திற்கு, ஒரு வாடிக்கையாளர் இந்த திட்டத்தை பயன்படுத்துகிறார் என்றால், அதன் வழியாக அவர் தினசரி 2 ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்.
திங்கள் கிழமை அன்று கிடைக்கும் 2 ஜிபியில் அவர் 1 ஜிபி மட்டுமே பயன்படுத்தி இருந்தாலும், அதே போல அடுத்த அடுத்த நாட்களிலும், அவர் அதே அளவு டேட்டாவை மட்டுமே பயன்படுத்தி இருந்தாலும் வார இறுதியில் கூடுதலாக 5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக, ஒரு வாடிக்கையாளர் வாரம் முழுவதும் தனது டேட்டாவை பயன்படுத்தவில்லை எனிமும் இறுதியில் மீதமுள்ள டேட்டாவை பயன்படுத்த முடியும்.
டேட்டா அளவை சரிபார்க்க, Vi மொபைல் ஆப்பில் உள்ள Active Packs & Services பிரிவுக்கு செக் செய்து கொள்ளலாம். அல்லது *199# என்கிற SSD குறியீட்டைப் பயன்படுத்தி அதன் முலம் அறியலாம்.
ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.249, ரூ.297, ரூ.299, ரூ.398, ரூ.399, ரூ.599, ரூ.299, ரூ.449, ரூ.699, ரூ.595 ஆகியவைகளில் இந்த சலுகை கிடைக்கும்.
மேலும், ரூ.819, ரூ.1197, ரூ.2399 மற்றும் ரூ.2595 உள்ளிட்ட உயர் ப்ரீபெய்ட் பேக்குகளிலும் பெறமுடியும். இதனால், விடுமுறை தினமான சனி, ஞாயிறுகளில் நமக்கு விரும்பியதை செல் போனில் பார்க்கமுடியும்.