1. Home
  2. தமிழ்நாடு

ரஷ்யாவின் அதிபராக 5-வது முறையாக விளாடிமிர் புதின் தேர்வு..!

1

உலகிலேயே மிகப் பெரிய நாடான ரஷ்யா, இந்தியாவை விட பல மடங்கு பெரியதாகும். ஆனால், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 15 கோடி தான். அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் உள்ள ரஷ்யாவில் ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடக்கிறது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷ்யாவில் அதிபா் தோதலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. பிரதான எதிா்க்கட்சிகளோ, எதிா்ப்பாளா்களோ தேர்தல் போட்டியில் இல்லாத சூழலில், நேரடியாகவும் இணையவழியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தோதல் உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து ரஷியாவுடன் சோத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்டது.

அதிபர் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், விளாடிமிர் புதின் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்றதாக தேர்தல் முடிவுகளில் தெரிய வருகிறது. பதிவான வாக்குகளில் 87.8 சதவீதம் வாக்குகள் புதினுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபிறகு ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.

1999-ல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை தாண்டியும், புதின் தொடர்ந்து அதிபராக நீடிக்க உள்ளார். ஏற்கெனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் அதிபராக தொடர உள்ளாா்.

ரஷ்ய அதிபராக 5-வது முறையாக பதவியேற்கவுள்ள புதினை வாழ்த்தி பிரதமர் மோடி பதிவிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் , “ரஷ்ய அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய விளாடிமிர் புதினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான சிறப்பு வாய்ந்த பங்களிப்பை மேலும் வலுப்படுத்த, வரும் ஆண்டுகளில் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like