1. Home
  2. தமிழ்நாடு

மாடு பிடி வீரர்களுக்கு தண்ணி காட்டிய வி.கே.சசிகலா மற்றும் டிடிவி-யின் காளை!

1

ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலம்.

நேற்று காலை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. காலை 7.00 மணிக்கு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.ஒவ்வொரு சுற்றுகளாக போட்டி விறுவிறுப்புடன் நடந்தது. மொத்தம் 11 சுற்றுகளாக போட்டி நிறைவடைந்தது. திமிறியபடி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.இறுதியில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்ததும் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் மொத்தம் 19 காளைகளை மடக்கி பிடித்த மாடுபிடி வீரர் திருப்பறங்குன்றம் கார்த்திக் முதலிடத்தை பிடித்தார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா முதல் பரிசாக 8 லட்சம் மதிப்பு கொண்ட காரை பரிசாக அளித்தனர். மேலும் ஒரு பசுவையும் அவருக்கு பரிசாக வழங்கினர். இதேபோன்று இரண்டாம் இடம் பிடித்த குன்னத்தூர் அரவிந்த் திவாகருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 13 காளைகளை அடக்கி முரளிதரன் என்பவர் 3வது இடமும் பெற்றார்.

இதேபோன்று களத்தில் எந்த வீரரையும் நெருங்க விடாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பிடிபடாத மாடாக சசிகலாவின் மாடு முதல் பரிசை தட்டி சென்றது. சசிகலாவின் மாடு பராமரிப்பாளர் மலையாண்டியிடம் இதற்கான முதல் பரிசான டிராக்டர் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் அவருக்கு ஒரு பசுவும் ஒரு கன்றுக்குட்டியும் பரிசாக வழங்கப்பட்டது. சசிகலாவின் காளை மாடுபிடி வீரர்கள் யாரையும் கிட்டே வர விடாதபடி வாடிவாசலில் திமிறி எழுந்தது. நீண்ட நேரம் போராடியும் ஒரு வீரர்களாலும் இந்த காளையை அடக்க முடியவில்லை.

இதேபோன்று இன்று நடந்த அவனியாபுர ஜல்லிக்கட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் சொந்த மாடும் பங்கேற்றது. டிடிவி தினகரனின் மாடு என்று சொல்லி வாடிவாசலில் விடப்பட்டது. காளையை பிடிக்க மாடு பிடி வீரர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், யாரிடமும் பிடிபடாமல் திமிறிக்கொண்டு கெத்தாக ஓடியது. பிடிக்க வந்த ஒருவரையும் உதறிவிட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்தது. இந்த காளையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோன்று முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் மாடும் பிடிமாடு ஆகாமல் வெற்றி பெற்றது. வீரர்களை நெருங்க விடாமல், வாடிவாசலில் சீறிப்பாய்ந்து சென்றது.

Trending News

Latest News

You May Like