1. Home
  2. தமிழ்நாடு

ஹீரோவாக அறிமுகமாகும் வி.ஜே.சித்து..!

Q

விஜே சித்து தற்போது 'சித்து வ்ளாக்ஸ்' என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். நண்பர்களுடன் செல்லும் பயணங்கள், தாங்கள் ருசிக்கும் விதவிதமான உணவுகள் குறித்த வீடியோக்களை அதில் பதிவிட்டு வருகிறார்.
இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து வி.ஜே.சித்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்தினை அவரவே இயக்கி நடிப்பதாகவும், பிரபல நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இதனை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இப்படத்திற்கான புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும், வருகிற மே மாதம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன. 

Trending News

Latest News

You May Like