வி.ஜே சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி..!
விஜே சித்ரா எந்த பின்புலமும் இல்லாமல் தனி ஆளாக போராடி தான் மீடியாவில் சாதித்திருந்தார்.விஜே சித்ரா அவருடைய பெற்றோருக்கு ஒரே மகள் தான்.
எப்போதும் சிரித்த முகமாக ஜாலியாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நாசரத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கில் தொங்கியபடி விஜே சித்ராவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் அவருடைய பெற்றோர் கதறி அழுதது காண்போரை நொறுங்க வைத்தது. சித்ராவின் இறப்புக்கு முந்தைய நாள் கூட அவர் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார்.சித்ராவின் இழப்பை தாங்க முடியாமல் அவருடைய பெற்றோர் கதறி அழுதது காண்போரை நொறுங்க வைத்தது. சித்ராவின் இறப்புக்கு முந்தைய நாள் கூட அவர் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார்.
தன்னுடைய மகள் இறப்பிற்கு காரணம் அவருடைய கணவர் ஹேம்நாத் தான் என்று எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஜே சித்ராவின் இறப்புக்கு பிறகு அவருடைய கணவர் ஹேம்நாத் 3 மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹேம்நாத் நிரபராதி என்று தீர்ப்பு வந்தது. ஹேம்நாத்தை விடுதலை செய்யவும் திருவள்ளூர் மகிமா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹேம்நாத் விடுதலையான நிலையில் அதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சித்ராவின் தந்தை இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.
சித்ரா இறப்பதற்கு முன்பு ஆசை ஆசையாக கட்டிய வீட்டில்தான் சித்ரா இறப்பிற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதிலும் சித்ராவின் ஒரு ரூமில் தான் அவருடைய அப்பாவும் அம்மாவும் தங்கியிருக்கிறார்கள். வழக்கமாக காலை நான்கு மணிக்கு சித்ராவின் தந்தை எழுந்து விடுவாராம். அதுபோல இன்றும் அவர் எழுந்திருக்கிறார். அப்போது அவருடைய மனைவி அவரிடம் காபி போடவா என்று கேட்டிருக்கிறார். வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். பிறகு சித்ராவின் அம்மா அந்த அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார். சித்ராவின் அப்பா மட்டும் அந்த அறையில் இருந்து இருக்கிறார். காலை 7 மணிவாக்கில் சித்ராவின் அம்மா கதவை தட்டி பார்த்திருக்கிறார்.
கதவு திறக்கப்படவில்லை என்பதால் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியோடு கதவை உடைத்து பார்த்த போது சித்ராவின் துப்பட்டாவில் அவர் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. 64 வயதாகும் காமராஜ் தன்னுடைய மகள் 2020 டிசம்பர் ஒன்பதாம் தேதி காலமான நிலையில் அதே மாதத்தில் 31ஆம் தேதி இவரும் தற்கொலை செய்து இருக்கிறார்.
ஒரே மகளையும் கணவரையும் இழந்து இப்போது சித்ராவின் அம்மா மட்டும் தனியாக கதறிக் கொண்டிருக்கும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குடும்பத்திற்கு வந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது.
#WATCH | “எப்போ அந்த தீர்ப்பு வந்துச்சோ அன்னைக்கே அவர் எதுவும் சாப்பிடாம ஆயிட்டாரு”
— Sun News (@sunnewstamil) December 31, 2024
VJ சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி#SunNews | #VJChitra | #VJChitraFatherDeath pic.twitter.com/M8Uqw4hX4D