1. Home
  2. தமிழ்நாடு

இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய விசிக நிர்வாகி !

இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியை துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய விசிக நிர்வாகி !


திண்டுக்கல் மாவட்டம் வேடச்நதூர் அருகே இந்து அமைப்பைச் சேர்ந்த வீரமணி கண்டன் என்பவரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த வீரமணிகண்டன், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார்.இந்த நிலையில் நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர் வீரமணி கண்டனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தததாக வீரமணிகண்டன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீரமணிகண்டனை வெட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் திண்டுக்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதை அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து இந்து மக்கள் கட்சியினர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர்.

Trending News

Latest News

You May Like