1. Home
  2. தமிழ்நாடு

திடீரென அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் ராமசாமி!

Q

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயரில் நாளை (ஜன.17) நடைபெறும் பேரணியில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், போட்டியிட வேண்டுமென 55,432 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்க தொழிலதிபர் ஆவார். ரோவண்ட் சயின்ஸ் என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like