1. Home
  2. தமிழ்நாடு

போலிசாருக்கு விட்டமின் , ஜிங்க்  மாத்திரை !! எதுக்கு தெரியுமா ?

போலிசாருக்கு விட்டமின் , ஜிங்க்  மாத்திரை !! எதுக்கு தெரியுமா ?


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும், ஊரடங்கை கண்காணிக்கும் போலீசாரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனைத் தடுக்க பாதுகாப்பு உடைகள் மற்றும் பல்வேறு கருவிகளை மருத்துவர்களுக்கு வழங்கினாலும், நோய் எதிர்ப்பு குறைபாடு காரணமாக, சீக்கிரம் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது.எனவே, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

போலிசாருக்கு விட்டமின் , ஜிங்க்  மாத்திரை !! எதுக்கு தெரியுமா ?

அதாவது, 10 நாட்களுக்கு தினமும் வைட்டமின் சி, ஜிங்க் ஆகிய மாத்திரைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றையும் சுகாதார பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like