1. Home
  2. தமிழ்நாடு

தளபதி விஜயை காப்பி அடிக்கும் விஷால்..! அரசியல் கட்சி தொடங்குகிறாரா ?

1

1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்த நடிகர் விஷால் நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க பொருளாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வருபவர்.

ஆந்திர பிரதேசம் நெல்லூர்தான் பூர்வீகம். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான விஷாலுக்கு சகோதரர் ஒருவரும் சகோதரி ஒருவரும் இருக்கிறார்கள். சென்னையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த விஷால், லயோலா கல்லூரியில் கல்லூரிப்படிப்பை முடித்தார்.நடிகர் அர்ஜூனிடம் உதவியாளராக சேர்ந்து திரைப்பயணத்திற்கு பிள்ளையார் சுளி போட்ட விஷாலுக்கு, அடுத்தப்படத்திலேயே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத்திரைப்படம்தான் ‘செல்லமே’. ஆஜானுபாகுவான உடலமைப்பும், பிசிறு இல்லாமல் அவர் அந்தத்திரைப்படத்தில் வெளிப்படுத்திய நடிப்பும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நடிப்பில் முழு மூச்சாக இறங்கிய விஷால், தானே முன் வந்து லிங்குசாமியிடம் சண்ட கோழி திரைப்படத்தில் வாய்ப்புக்கேட்டார்.நெடும் யோசனைக்குப் பிறகு லிங்கு விஷாலை கதாநாயகனாக நடிக்க வைக்க ஒத்துக்கொண்டார். அந்தப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷாலும் ஆக்‌ஷன் ஹீரோவாக பிரதிபலித்தார். 

1

இந்நிலையில் நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார். பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார். வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள ரசிகர்களை சந்திப்பதையும், கிராம மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். விரைவில் கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like