1. Home
  2. தமிழ்நாடு

சீனாவில் விசா தளர்வு : 6 நாட்கள் வரை சீனாவில் தங்கலாம்..!

1

சீனா வழியாக செல்லும் பயணிகளுக்கான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி மற்ற நாட்டுக்கு செல்லும் பயணிகள் சீனாவில் 144 மணி நேரம் அதாவது 6 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். 

மேலும் இதனை பயன்படுத்தி சீனாவை சுற்றியும் பார்க்க முடியும். இதன்மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 54 நாடுகளை சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஹெனான் மாகாணம் செங்சூ சின்செங் விமான நிலையம், யுனான் மாகாணம் லிஜாங் விமான நிலையம் மற்றும் அங்குள்ள துறைமுகத்திலும் இந்த விசா தளர்வு நடைமுறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. 

இதன்மூலம் விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like