விருதுநகர் தொகுதியில் இழுபறி : விஜய பிரபாகரனை பின்னுக்கு தள்ளிய காங். வேட்பாளர்..!

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனை களமிறங்கியுள்ளார்.விருதுநகர் லோக்சபா தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் இந்த முறையும் போட்டியிட்டு இருக்கும் நிலையில் அவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காலையில் இருந்து வெளியான தகவலின் படி தேமுதிக சார்பாக போட்டியிட்ட விஜய பிரபாகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
1 மணி அளவில் வெளியான தபால் ஒட்டுகளில் முடிவு படி தேமுதிகவின் விஜய பிரபாகரன் 147271 ஓட்டுகள் பற்றி முன்னிலையில் இருக்கிறார். சிட்டிங் காங்கிரஸ் எம்பியாக இருக்கும் மாணிக்கம் தாகூர் 147239 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ராதிகா 56948 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கௌஷிக் 29234 வாக்குகளும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு அவருடைய சொந்த தொகுதியில் அவருடைய மகன் முதல் முறையாக போட்டியிடுகிறார். ஜாதி ரீதியான ஓட்டுகள்,கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு ,இதைத் தாண்டி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் அனுதாப ஒட்டு என்று சளைக்காமல் எல்லா விதத்திலும் மாணிக்கம் தாகூருக்கு டஃப் கொடுத்து வருகிறார்.
விருதுநகர் தொகுதியில் 213 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும், மாணிக்கம் தாகூரும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது விஜய பிரபாகரனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அமர்ந்து பிரேமலதா தியானம்