1. Home
  2. தமிழ்நாடு

இணையத்தில் வைரலாகும் விராட் கோலி 10th மார்க் ஷீட்..!

1

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பழைய 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த மதிப்பெண் பட்டியல் 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஜிதின் யாதவ் என்பவரால் பகிரப்பட்டது. தற்போது மீண்டும் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மதிப்பெண் பட்டியலின்படி, விராட் கோலி மொழிப் பாடங்களான ஆங்கிலம் மற்றும் இந்தி மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் சிறப்பாக மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் ஒப்பீட்டளவில் குறைவான மதிப்பெண்களையே பெற்றுள்ளார் என்பது தெரியவருகிறது. பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆங்கிலம் - 83 (கிரேடு A1), இந்தி - 75 (கிரேடு பி1), சமூக அறிவியல் - 81 (கிரேடு A2), கணிதம் - 51 (கிரேடு C2), தகவல் தொழில்நுட்பம் - 74 (கிரேடு C2).

 

இந்த மதிப்பெண் பட்டியல் ஒரு முக்கியமான விஷயத்தை உணர்த்துகிறது. அதாவது, பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெறாத ஒருவர் கூட தனது ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் சரியான திசையில் செலுத்தி உலக அளவில் சாதனை படைக்க முடியும் என்பதற்கு விராட் கோலியின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. அவர் பள்ளியில் அதிக ரன்கள் எடுத்தவராக இல்லாவிட்டாலும், கிரிக்கெட் களத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி ஒரு உலகளாவிய கிரிக்கெட் அடையாளமாக உயர்ந்துள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like