1. Home
  2. தமிழ்நாடு

கோலி ருத்ரதாண்டவத்தால் இந்தியா அபார வெற்றி..!

Q

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.
இன்று (மார்ச் 04) நடக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் மோதன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கூப்பர் கோன்னலே ரன் எடுக்காமல் அவுட்டானார். பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.
டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்து இருந்த போது வருண் பந்தில் அவுட்டானார். பிறகு ஸ்மித்தும், லபுஸ்சங்கேவும் ரன்களை சேர்க்க துவங்கினர். ஆனால், லபுஸ்சங்கே 29, இங்கிலீஸ் 11 ரன்களில் அவுட்டானார்கள். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மித்தும் 73 ரன்களுக்கு அவுட்டானார். மேக்ஸ்வெல் 7 , பென் துவார்சுஹூயுஸ் 19, ரன்களில் அவுட்டானார். அலெக்ஸ் கரே 61 ரன்களில் ரன் அவுட் ஆனார். இறுதியில் ஆஸி., அணி 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணியின் முகமது ஷமி 3, வருண், ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
265 என்ற கடின இலக்கை துரத்திய இந்திய அணியில் கில்(8), ரோஹித் சர்மா(28) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய கோலி நிதானமாக ஆடி 84 ரன்கள் குவித்தார். அதன் பயனாக, இறுதியில் 48.1 ஓவரில் 267/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

Trending News

Latest News

You May Like