1. Home
  2. தமிழ்நாடு

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!


பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துபாயில் நேற்று (24.09.20) பஞ்சாப் அணியுடனான ஆட்டத்தில் பெங்களூரு அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் மிகவும் தாமதமாக பந்து வீசிக்கொண்டிருந்த பெங்களூர் அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் பந்து வீச அதிகம் நேரம் எடுத்துக் கொண்டது விதிமீறல் என்றும், அதனால் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like