ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி..!

அப்போது அவர் பேசியிருப்பதாவது: “விளையாட்டை ஊக்குவிக்கும் ஒரு தேசத்தில், ஆடவர்களை மையப்படுத்தி மட்டும் விளையாட்டை வளர்க்க முடியாது. இதனால், மகளிர் கிரிக்கெட் பிரீமியர் லீக் மேலும் வளர்ச்சியடையும். 2028 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக கிரிக்கெட் இடம்பெற்றால் அப்போது இந்தியா வென்று பதக்கத்துடன் திரும்புவது இந்தியாவுக்கு சிறந்த தருணமாக அமையும்.
அந்த ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், அப்போது, நான் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், அந்த ஒரேயொரு போட்டியில் விளையாடுவதற்காக மட்டுமாவது எனது ஓய்வு முடிவை திரும்பப்பெறுவேன்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்பதைக் குறித்து சத்தியமாக எனக்கு தெரியாது. ஆனால், இதே கேள்விக்கான பதிலை அறிய வேண்டி சக வீரர் ஒருவரிடம் இது குறித்து வினவினேன். அப்போது அவரும் இதே பதிலையே தந்தார். ஒருவேளை, நிறைய இடங்களுக்கு பயணம் மேற்கொள்வேன்” என்றார்.