கோலி - அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது..!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். "அளவுக்கு அதிகமான சந்தோஷத்தில் இருக்கிறேன். கடந்த 15ஆம் தேதி எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவனுக்கு 'ஆகாய்' என பெயர் வைத்துள்ளோம். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.