1. Home
  2. தமிழ்நாடு

வைரல் வீடியோ..! உள்ளாடை அணியாதவர்களுக்கு தேர்வுக்கு அனுமதி மறுப்பு!

1

 ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில், Bra அதாவது, உள்ளாடை அணியாமல் வந்த பெண்களை தேர்வு எழுத விடாமல் செய்திருக்கின்றனர். இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஒரு நைஜீரியன் ஒலபிசி ஒனபாஞ்சோ என்கிற பல்கலை கழகத்தின் வீடியோதான் இத்தனைக்கும் காரணமாக இருக்கிறது. சமீபத்தில் வைரலான அந்த வீடியோவில் ஒரு தேர்வுக்கு முன்பாக, ஒரு மாணவியை பிரா அணிந்திருக்கிறாரா இல்லையா என்று சோதிக்கின்றனர். இந்த வீடியோதான் தற்போது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், தேர்வு எழுத வரும் மாணவிகளின் மார்பகங்களை, ஆசிரியைகள் தொட்டு பார்த்து, உள்ளாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதை பரிசோதிக்கிறார். பிரா அணிய வேண்டும் என்பது, அந்த பல்கலைக்கழகத்தின் ஆடை கோட்பாடு என கூறப்படுகிறது. அதை சோதிப்பதற்காகவே அவர்கள் இப்படி செய்திருக்கின்றனர்.

இந்த ஆடை பரிசோதனை, உலக மக்களால் கண்டனங்களுக்கு உட்பட்டு வருவதை ஒட்டி, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் இது குறித்து எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இருப்பினும், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் அணி தலைவர் (ஆண்) ஒருவர், கவனச்சிதறலை தவிர்ப்பதற்காக இப்படி ஒரு நடைமுறை இருப்பதாக கூறியிருக்கிறார். இதை நியாயப்படுத்தினாலும், இதை வேறு மாதிரியாக கையாண்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இது பாலியல் ரீதியானது என்றும், இழிவானது என்றும் பிறர் கூறிய விமர்சனங்களையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் எது போன்ற ஆடை கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்கிற விவரமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உடலின் எந்த பாகத்தை காண்பிக்கும் ஆடையை அணிய கூடாது, ட்ரான்ஸ்பரண்ட் ஆடைகளை அணிய கூடாது, உடலுடன் ஒட்டிய ஆடைகளை அணிய கூடாது, உள்ளாடை தெரியும் அளவிற்கு உடை அணிய கூடாது என்றுபல கட்டுப்பாடுகள் இதில் விதிக்கப்பட்டுள்ளன. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இந்த ஆடை கட்டுப்பாடுகளில் முக்கால் வாசி பெண்களை குறிவைத்தே இருக்கின்றன. 


 


 

Trending News

Latest News

You May Like