1. Home
  2. தமிழ்நாடு

வீரராகவர் கோவில் திருவிழா பட்டாசு விபத்து செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது: பிரியங்கா காந்தி

1

காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் பகுதியில் வீரராகவர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகவும் பிரபலமாகும். இதில் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழா நடந்து வந்தது. இதையடுத்து நேற்று இரவு பல்வேறு நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அதனை கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நள்ளிரவு 12:30 மணியளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசுகள் மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்து சிதறிய பட்டாசுகளில் இருந்து தெறித்த தீப்பொறிகள் விழுந்தன.

இதையடுத்து மொத்தமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இந்த வெடி விபத்தால் கடும் தீப்பிளம்பு ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் திரண்டு நின்ற பக்தர்களின் மீது தீப்பிடித்தது. இந்த விபத்தில் 154 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்த தீ விபத்து செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

காசர்கோடு பட்டாசு வெடிவிபத்தால் 154 பேர் காயம் அடைந்த நிலையில், 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்ற செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் என்னுடைய நினைவும் மற்றும் பிரார்த்தனை காயம் அடைந்தவர்கள் மற்றம் அவர்களுடைய குடும்பத்தினரோடு உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முழு மனதுடன் ஒன்றுகூடி மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

Trending News

Latest News

You May Like