திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து..!
ஆந்திராவில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோடைகால விடுமுறையில் மேலும் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், திருப்பதியில் நேற்றுமுன்தினம் 75,414 பேர் தரிசனம் செய்துள்ளனர். 30,073 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். ரூ.3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் , நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
ஆந்திராவை பொருத்தவரை, மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல், மே மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் கடந்த 2 வாரங்களில் திருப்பதி வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனை பயன்படுத்தி பக்தர்கள் ஏழுமலையானை மனதார தரிசிக்கலாம்.