1. Home
  2. தமிழ்நாடு

முகக்கவசம் அணிந்து வர கூறிய பெண் அரசு அலுவலர் மீது கொடூரத் தாக்குதல்.. வீடியோ..

முகக்கவசம் அணிந்து வர கூறிய பெண் அரசு அலுவலர் மீது கொடூரத் தாக்குதல்.. வீடியோ..


ஆந்திராவில் முகக்கவசம் அணிய அறிவுரைக் கூறிய பெண்ணை இரும்புக் கம்பியால் கண்மூடித்தனமாகத் தாக்கிய சுற்றுலாத்துறை அலுவலர் கைது செய்யப்பட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த் தொற்றைப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்பதைத்தவிர வேறு வழியில்லை என மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

மேலும் சமூக விலகல் என்பதை கடைப்பிடிக்க வேண்டி பலரும் கூறிவருகின்றனர்.

இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனிடையே மருத்துவ வல்லுநர்கள் சோஷியல் டிஸ்டன்ஸ், மாஸ்க், சானிடைசர் ஆகிய மூன்றும் அவசியம் எனக் கூறி வருகின்றனர்.  

இந்நிலையில், முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியதற்காக ஒரு பெண் காட்டுமிராண்டித்தனமாக தக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்துறையில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் உஷா. இவர் ஒரு மாற்றுத்திறனாளி பெண்.

இவர் பணிபுரியும் அலுவலகத்திற்குள் வந்த ஒருவரை முகக்கவசம் அணிந்து உள்ளே வரும்படி அவர் கூறியதாகத் தெரிகிறது. அதைக் கேட்ட அந்த நபர் ஆத்திரம் கொண்டு மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரை நாற்காலியில் இருந்து கீழே தள்ளி இரும்பு கம்பியைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்.

அதைக் கண்ட சிலர் அவரை தடுத்து வெளியே அனுப்புகின்றனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. 

Trending News

Latest News

You May Like