மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மோரே நகரில் மீண்டும் வன்முறை..!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக, குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியான மோரேவில் மீண்டும் வன்முறை ஏற்பட்டு, வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மோரே பஜாரில் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள், மெய்தி மக்களின் வீடு மற்றும் கடைகளை நோக்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இது குறித்து மணிப்பூர் மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோரே நகரத்தில் நடந்த வன்முறையில் 16 வீடு தீக்கரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவ வீரர்கள் மோரே நகரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.