1. Home
  2. தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடப்பது கஷ்டமாக உள்ளது - குஷ்பூ வேதனை!

1

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ரோட்டரி மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் குஷ்பூ பேசுகையில்: எல்லா இடத்திலும் பிரச்சனைகள் என்பது உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் போது அதனை அரசியல் விவாதம் ஆக்க வேண்டாம்.

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறி வருவது வேதனையான விசியம். நான் வேறு கட்சியில் இருப்பதாக நினைக்காமல், பெண்களை அழைத்து இதற்கான தீர்வை ஏற்படுத்த குழு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்து பெண்களை அழைத்து இந்த பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதை தவிர்ப்பதக்கான நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளை தான் முதல்வர் பார்க்க வேண்டும்.

கேரளாவில் உள்ள ஹேமா கமிட்டி போல் தமிழகத்தில் நடிகர்கள் சங்கம் சார்பில் ரோகிணி மூலம் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நிறைய யூடுயூபர்ஸ் எங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். தமிழகத்தில் ரூ. 2000 காக யூடுயூபர்ஸ் பெண்களை பற்றி அவதூறாக பேசும் பிரச்னைகள் உள்ளது.

தங்கள் வீட்டிலும் பெண்கள் இருப்பதை மறந்து கணவன், மனைவி இடையே நடப்பதை பெண்கள் பற்றி அவதூறாக பேசுகின்றனர். தமிழகத்தில் யூடூபர்ஸ் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் மேல் புகார்கள் வரும்போது குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடப்பது கஷ்டமாக உள்ளது. போக்சோ பிரச்னைகள் 90% குடும்பத்தில் நெருக்கமானவர்கள், அறிந்தவர்களால் தான் ஏற்படுகிறது. இதை பற்றி பேச வேண்டும். புகார்கள் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

விஜய் மிகப் பெரிய நடிகர். அவருக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு உள்ளது. தற்போது விஜய் அரசியலில் இருப்பதால் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like