1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவில் சைலண்டாக காய் நகர்த்திய வினோஜ் பி செல்வம்..!! யார் இந்த வினோஜ் பி செல்வம்..?

1

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. பாஜக எனும் ஒரே கட்சியை வீழ்த்த, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு களம் காண்கின்றன. 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக தீவிரமாக களத்தில் பணியாற்றி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்தவரை, கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. 

1

அதிமுக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேபோல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ விஜயதாரணி டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார்.இதேபோன்று, பாஜகவில் இணைபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் என தகவல் வெளியானது.முக்கிய பாஜக தலைவர்கள், மாற்றுக் கட்சியினரிடம் பேசி, அவர்களை பாஜகவில் இணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கின் சில நிகழ்வுகளில், திமுகவின் நடவடிக்கைகளின்மீது பிரேமலதா வருத்தம் கொண்டுள்ளார்.. இதனை வெளிப்படையாகவே சொல்லி, திமுகவுடன் கூட்டணி போக விரும்பவில்லை என்பதையும் கூறிவிட்டார். எனவே, அதிமுகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுகவும், பாஜகவும் தயாராகி வருகின்றன.

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்கு பாஜகவின் சார்பில் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் நேரில் சென்று பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினார்.மேலும், பாஜகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், பாஜகவை வலுப்படுத்தும் பணிகளையும் அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், துறைமுகம் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் தலைமையில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், துறைமுகம் தொகுதி அதிமுக மாணவரணி இணைச்செயலாளர் விஜய் அசோகம், துறைமுகம் பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாலர் அன்பழகன், இளைஞரணி செயலாளர் சந்திர மோகன், அதிமுகவின் 54வது வட்டக்கழகச் செயலாளரும், துறைமுக பகுதி IT WING பகுதி கழக செயலாளருமான லோகேஷ், அதிமுக கழக செயல் வீரர்கள் வரூண், சீனு, 54வது வட்டக்கழக நிர்வாகி வஜ்ஜிரவேலு,  துறைமுகம் பகுதியைச் சேர்ந்த தேமுதிகவைச் சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளர் விமல்ராஜ், கேப்டன் மன்ற துணைச் செயலாளர் மோகன், கேப்டன் மன்ற பகுதிச் செயலாளர் விக்னேஷ், தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகளான சதீஷ், ஆறுமுகம், ராஜேந்திரன், சந்திரசேகர் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

1

சமீபத்தில் கூட பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கோரிக்கை விடுத்தார். அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை சந்தித்த அவர், சென்னையில் யானை கவுனி பாலத்தை கட்டி முடிக்கவும், சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு ரயில் இணைப்புகளை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துறைமுக தொகுதி பொறுப்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலையில், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like