1. Home
  2. தமிழ்நாடு

மத்திய சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம்..! யார் இந்த வினோஜ் பி செல்வம்..!!

11

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, வினோஜ் பி. செல்வம், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.
மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறார். 

யார் இந்த வினோஜ் பி செல்வம் :

2021 சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரும் தற்போதைய அமைச்சருமான சேகர்பாபுவையே வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலை பெற்று சில மணி நேரங்கள் திணறடித்தவர் தான் பாஜகவை சேர்ந்த வினோஜ் பி செல்வம்.  பாஜக தனக்கு நிச்சயமாக அந்த தொகுதியை ஒதுக்கிவிடும் என்ற நம்பிக்கையில், அந்த பகுதிகளில் நலத்திட்டங்கள் வழங்குவது, மக்களிடையே சென்று குறைகளை கேட்பது, மத்திய அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

மத்திய சென்னையின் ஹீரோவாகவே அவர் மாறியுள்ளார்.  அவர் பாஜகவின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதிலும், பாஜகவை வலுப்படுத்தும் பணிகளையும் அவர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

1

சமீபத்தில் கூட பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு வசதிகளை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கோரிக்கை விடுத்தார். அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை சந்தித்த அவர், சென்னையில் யானை கவுனி பாலத்தை கட்டி முடிக்கவும், சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு ரயில் இணைப்புகளை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவின் போது கூட   திரையரங்கில் வெளியான ஹனுமன் திரைப்படத்தை பிரபலப்படுத்தும் விதமாக மத்திய சென்னை மக்கள் ஆயிரம் பேருக்கு ஏ.ஜி.எஸ் தியேட்டரில் சினிமா பார்க்க இலவச டிக்கெட்டுகளை வினோஜ் பி செல்வம் வீடு விடாக சென்று கொடுத்தவர்.மகா சிவராத்திரியையொட்டி தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சென்னையில் உள்ள முக்கிய சிவாலயங்களில் பாஜக சார்பில் அன்னதானம் வழங்கினார். பாஜக சார்பில் சுமார் 25,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. 

மக்களுக்கான மருத்துவ முகாம்கள், அரசின் திட்டங்களை அறிந்துகொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல நலப்பணிகளை செய்து வந்தார். இதனால் மக்கள் மத்தியிலும் நல்ல பெயரையும் வரவேற்பையும் பெற்றவர் தான் இந்த வினோஜ் பி செல்வம்.

Trending News

Latest News

You May Like