1. Home
  2. தமிழ்நாடு

வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது : குடியரசுத் தலைவர் முர்மு..!

1

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் (அதாவது கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாகத் தகவல்) இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பி மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தைச் சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட உள்ளது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, வினேஷ் போகத்தின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது: நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார். அவரது காவியமான மன உறுதியும் பின்னடைவும் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது. எதிர்காலத்தில் அவளுக்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்றார். 


 

Trending News

Latest News

You May Like