1. Home
  2. தமிழ்நாடு

முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பின்னடைவு!

W

பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரீசிலிருந்து திரும்பிய சில தினங்களில் அவர் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அரியானா சட்டசபை தேர்தலில் அவருக்குக் காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது. வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் பா.ஜ.கச்சார்பில் யோகேஷ் குமாரும், இந்திய தேசிய லோக்தளம் சார்பில் சுரேந்தர் லாதரும், ஜே.ஜே.பி. சார்பில் அமர் ஜித்தும், ஆம் ஆத்மி சார்பில் கவிதா ராணியும் களத்தில் இருந்தனர்.

முதல் சுற்று முடிவில் வினேஷ் போகத் 214 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஆனால் 2-வது சுற்றில் நிலைமை மாறியது. வினேஷ் போகத் பின் தங்கினார். அவர் 2039 வாக்குகள் வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கினார்.

3-வது சுற்று முடிவில் பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் குமார் 14,329 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். வினேஷ் போகத் 12,290 வாக்குகள் பெற்றார்.

Trending News

Latest News

You May Like