1. Home
  2. தமிழ்நாடு

மவுனம் கலைத்தார் வினேஷ் போகத்..! விருப்பப்பட்டு இல்ல...! அவசியத்தால்...

Q

ஹரியானா, ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மல்யுத்த வீரர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற பாஜ., கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளம் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எனது நோக்கம். நாங்கள் தெருவில் போராடினோம். எங்களுக்கு என்ன கிடைத்தது? நாங்கள் அவமானப் படுத்தப்பட்டோம். இதை தவிர வேறு ஏதும் கிடைக்க வில்லை.

நான் ஒலிம்பிக்கிற்கு சென்றேன். எனக்கு நீதி கிடைத்ததா? ஒன்றுமில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தான் அரசியலுக்கு விருப்பப்பட்டு வரவில்லை. அவசியம் என்பதால் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். 2024 ஒலிம்பிக்கிற்குப் பிறகு, சூழ்நிலைகள் என்னை தேர்தலில் போட்டியிட முடிவெடுக்க செய்தது.

எந்த ஒரு பெண்ணும் அரசியலில் நுழைவதற்காக தெருவில் இறங்கி போராட மாட்டார்கள். என்னைப் போன்ற பெயர் பெற்ற, பதக்கம் வென்று, மக்களுக்குத் தெரிந்த வீரர்கள், நாங்கள் வேண்டுமானால் கஷ்டப்பட்டு அரசியலுக்கு வந்திருக்கலாம்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கட்சிக்கு எல்லா வாய்ப்புகளையும் வழங்கிய பிறகு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. கட்சியினர் அனைவரும் அவருக்கு ஆதரவாக நின்று மல்யுத்த வீரர்களான எங்களை பொய்யர்களாக சித்தரித்தனர். எங்களின் பதக்கத்தை கங்கையில் மூழ்கடிப்போம் என்று மிரட்டியபோது, எங்களிடம் வந்தது காங்கிரஸ் மட்டுமல்ல. மம்தா பானர்ஜி எங்களை அழைத்து, அதை செய்ய வேண்டாம் என்று கெஞ்சினார்.

அவர் காங்கிரசை சேர்ந்தவர் அல்ல. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கள் போராட்டத்திற்கு வந்தார். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு அரசியல் கட்சியால் நடத்தப்பட்டது என்று பா.ஜ., கூற முடியாது.

சில நேரங்களில் அவர்கள் எங்களை முஸ்லிம்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள், சில சமயங்களில் நாங்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறோம் அல்லது காலிஸ்தானியர்கள் என்று சொல்கிறார்கள். இது எல்லாம் அரசியலில் வேலைக்காகாது. தூய்மையான அரசியலில் பா.ஜ., ஈடுபட வேண்டும்.

எல்லாத் துறையிலும் ஆரம்பம் கடினமானது. அரசியல் வேறுபட்டதல்ல, ஆனால் காலப்போக்கில், நான் கற்றுக்கொண்டு என்னை மாற்றிக் கொள்வேன். மக்களைப் பற்றி அறிந்துகொள்வதும் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதும்தான் இப்போதுமிக முக்கியமான சவால்.

ஜூலானா தொகுதியை தேர்ந்தெடுத்தது காங்கிரஸ் தலைமையின் முடிவு. ஆனால் முழு ஹரியானாவின் வளர்ச்சிக்காக பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். ஒரு தொகுதியில் மட்டும் பணியாற்ற விரும்பவில்லை. இளம் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே எனது நோக்கம்.

எனது முதன்மை குறிக்கோள் இளம் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும், குறிப்பாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு. நம்பிக்கையை வழங்க விரும்புகிறேன்.

இது எளிதான சண்டையாக இருந்தால், அவர்கள் இங்கிருந்து (ஜூலானா) வினேஷ் போகட்டை களமிறக்க தேர்வு செய்திருக்க மாட்டார்கள். நான் முழு பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகிறேன். எனது வேலையை நான் நம்புகிறேன். இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.

Trending News

Latest News

You May Like