1. Home
  2. தமிழ்நாடு

4000 கிலோ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோவை புலியகுளம் முந்தி விநாயகர் சிலை..!

1

ஆசியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை கொண்ட கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகக் கோவிலில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விநாயகருக்கு அதிகாலையில் கணபதி ஹோமத்தில் ஆரம்பித்து 16 வகையான வாசனைத் திரவியங்கள், அபிஷேகப் பொருட்களால், விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஆசியாவிலேயே பெரிய விநாயகர் என்ற பெருமையுடைய இந்த கோவிலில், விநாயகர் சிலை 19 அடி உயரமும் 10 அடி அகலமும் 190 டன் எடையும் கொண்ட பிரமாண்டமான விநாயகர் ஆகும். புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறும்.

அந்தவகையில் இந்த ஆண்டும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இக்கோயிலில்  உள்ள ஆசியாவிலேயே உயரமான ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலைக்கு 4 டன் (4000 கிலோ) மலர்களால் ராஜ  அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. செவ்வந்தி, ரோஜா, அருகம்புல் ஆகிய பூ மாலைகளை விநாயகருக்கு அலங்காரமாக அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதற்காகச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், சிரமமின்றிப் பக்தர்கள் வரிசையாக நின்று விநாயகரை வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மேலும் இப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். புலியங்குளம் முந்தி விநாயகர் கோவிலில் கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டத்திலிருந்தும் திரளான பக்தர்களும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Trending News

Latest News

You May Like