1. Home
  2. தமிழ்நாடு

இன்று விநாயகர் சதுர்த்தி : பூஜை செய்ய நல்ல நேரம் இது தான்..!

1

தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்கக் கூடியவர் விநாயகர். அவருக்குரிய சிறப்பான நாட்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வதற்கு மட்டுமல்ல, விநாயகரை வாங்கி வருவதற்கும் நல்ல நேரம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அப்படி விநாயகரை எந்த நாளில், எந்த நேரத்தில் வாங்கி வந்து வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

சிவன், சிறுவனாக இருந்த விநாயகரின் தலையை வெட்டி எடுத்தார். பிறகு பார்வதி தேவி கேட்டுக் கொண்டதன் படி, தனது தவறை உணர்ந்து விநாயகருக்கு மீண்டும் உயிர் தர நினைத்தார் சிவ பெருமான். தனது பூதகணங்களை அனுப்பி, நீங்கள் செல்லும் வழியில் முதலில் காணும் உயிரினத்தின் தலையை கொண்டு வரும் உத்தரவிட்டார்.

சிவனின் உத்தரவின்படி முதலில் கண்ணில் பட்ட யானையின் தலையை கொண்டு வந்தனர் சிவ கணங்கள். யானையின் தலையை கொண்டு, விநாயகரை மீண்டும் உயிர்பெற்ற எழ செய்தார் சிவ பெருமான். இவ்வாறு இரண்டாவது முறையாக விநாயகர் உயிர்பெற்ற நாளையே நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடுகிறோம்.

வழக்கமாக ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம். ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா புரட்டாசி மாதத்தின் முதல் நாளில் வருகிறது. அதிலும் செப்டம்பர் 18 ம் தேதி கொண்டாடுவதா அல்லது செப்டம்பர் 19 ம் தேதி கொண்டாடுவதா என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18 ம் தேதி காலை 11.39 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை உள்ளது. சூரிய உதயத்தின் போது சதுர்த்தி திதி இருக்கும் நாளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பஞ்சாங்கம் இருக்கும் அதன் அடிப்படையிலேயே விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதன் அடிப்படையில் பார்த்தால் பிள்ளையாபட்டி தலத்தில் செப்டம்பர் 19 ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம், மிகவும் புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு செப்டம்பர் 18 ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் 18, 19 இரண்டு நாட்களுமே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு ஏற்ற நாள் தான்.

செப்டம்பர் 18 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள், காலை 9 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விநாயகரை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். செப்டம்பர் 18 ம் தேதி திங்கட்கிழமை என்பதால் காலை 07.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் உள்ளது. அதனால் 9 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. விநாயகர் சதுர்த்தி பூஜையை பகல் 12 மணி முதல் 01.30 வரையிலான நேரம் அல்லது மாலை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 19 ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள், காலை 7 மணி முதல் 08.45 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைத்து விட வேண்டும். அன்றைய தினம் செவ்வாய்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 வரை எமகண்ட நேரம் துவங்கி விடும். அதனால் அதற்கு முன்பாக விநாயகர் சிலையை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து விட வேண்டும். காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள்ளான நேரத்திலும், மாலை 6 மணிக்கு மேலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை செய்யலாம்.

Trending News

Latest News

You May Like