1. Home
  2. தமிழ்நாடு

ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதி தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம்..!

1

விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர்-புனிதா தம்பதியின் மகன் சந்துரு (42).   1982-ம் ஆண்டு பிறந்த சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து விட்டு பின்னர் காரைக்குடியில் பி.எஸ்.சி. விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர் தொடர்ந்து டெல்லியில் எம்.எஸ்.சி. அக்ரி, பி.ஹெச்.டி. படிப்பை முடித்துள்ளார்.

 

2009-ம் ஆண்டு யு..பி.எஸ்.சி. தேர்வு எழுதிய சந்துருவிற்கு 2-வது முயற்சியிலேயே ஐ.எப்.எஸ். பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்தது. பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதராக அலுவலகத்திலும், பின்னர் 2020-ம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் துறையில் அலுவலக தனிச்செயலர் பதவி என முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான 3 துணைத் தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியமித்து மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like