1. Home
  2. தமிழ்நாடு

நாளை விக்கிரவாண்டி எம்.எல்.ஏ பதவியேற்பு..!

1

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 10,602 வாக்குகளும் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.

தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிலையில், அன்னியூர் சிவாவிற்கு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக நாளை காலை 10:30 மணி அளவில் சபாநாயகர் அப்பாவு பதவி பிராமாணம் செய்து வைக்க உள்ளார். அன்னியூர் சிவா உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் இதுவரை போட்டியிடாமல் நேரடியாக எம்எல்ஏ தேர்தலில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like