விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் 27,421 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!
விக்கிரவாண்டி தொகுதி 7 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 7-வது சுற்றின் முடிவில் திமுக 44,780 வாக்குகளும், பாமக 17,359 வாக்குகளும், நாதக 3556 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 311 வாக்குகள் பதிவாகியுள்ளது. திமுக 27,421 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.