6 மாதத்திற்குள் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல்..?
கடந்த 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக உறுப்பினராக இருந்தவர் ராதாமணி. இவர் அப்பதவியில் இருக்கும் போதே உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு தோல்வியுற்றார். அதே விக்கிரபாண்டி தொகுதியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் புகழேந்தியே மீண்டும் போட்டியிட்டார். இம்முறை வெற்றி பெற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார் புகழேந்தி.
வந்த நிலையில்,சமீபத்தில் புகழேந்தி உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது. இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுவாக பதவியில் இருக்கும் ஒருவர் மறைந்தாலோ அல்லது அவர் வகித்திருக்கும் பதவியை ராஜினாமா செய்தாலோ அந்தத் தொகுதியில், ஆறு மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இதேபோல விளவங்கோடு சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்தத் தொகுதிக்கு தற்போது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் பொதுத் தேர்தல் அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டதால் விக்கிரவாண்டிக்கு இப்போது தேர்தல் நடத்தப்பட மாட்டாது. பொதுத் தேர்தல் முடிந்த பிறகுதான் அங்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது.