விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டம்..! 19 வருடங்களை நிறைவு செய்த ‘அந்நியன்’..!

ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகிய படம் அந்நியன்.இந்தப் படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த சூழலில் இந்த படம் வெளியான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது.
விக்ரமுடன் சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் இந்தப் படத்தில் கலக்கலான நடிப்பை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இப்படம் வெளியாகி 19 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இதை விக்ரம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர்கள் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன். இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் பின்னர், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது. பிரான்சில் வெளியான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் அந்நியன் படத்திற்கு உண்டு. இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருந்தார். அவருக்கு மல்டிபிள் டிஸ் ஆர்டர் என்ற நோய் இருப்பதாக காட்டப்பட்டிருந்தது. இதையொட்டி அம்பியாக இருக்கும் அவர் ரெமோ மற்றும் அந்நியன் என இருவேறு கேரக்டர்களை பெற்று, அந்த வாழ்க்கையையும் வாழ்வதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. அம்பியாக இருந்து நாயகி நந்தினியை காதலிக்கிறார். ஆனால் அவரது கேரக்டரால் அவரது காதல் நிராகரிக்கப்படுகிறது.
இதையடுத்து அவர் ரெமோவாக மாறி நந்தினியை தன்வசப்படுத்துகிறார். அவர் யார் என்ற உண்மை தெரியாமல் அவரை காதலிக்கிறார் நந்தினி. இதனிடையே, அந்நியனாக, கருட புராணத்தின்படி கெட்டவர்களை பழி தீர்க்கிறார் அம்பி. இறுதியில் அவருக்கு தண்டனை கிடைத்ததா என்பதாக கதை நிறைவடையும். இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 18 ஆண்டுகளை கடந்துள்ளது. குறைவான பட்ஜெட்டில் நிறைவான படத்தை கொடுத்திருந்த இயக்குநர் ஷங்கர், இத்தகைய படங்களின்மூலம்தான் தன்னை முன்னணி இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படம் 19 ஆண்டுகளை பூர்த்தி செய்ததையொட்டி படத்தின் நாயகன் விக்ரம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
An unforgettable movie & one of my most memorable roles. Thank you for the boundless love that always surrounds it..
— Vikram (@chiyaan) June 17, 2024
in every language. Can’t thank @shankarshanmugh sir enough for his brilliance. #Anniyan https://t.co/RPoYihPVh9