1. Home
  2. தமிழ்நாடு

விஜய் கண்ணீர் பதிவு! இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது..!

1

விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒருபுறம் திரள, ஏராளமான மக்களும் மாநாட்டுத் திடலுக்கு சென்று இருந்தனர். 

இருப்பினும், தவெக மாநாட்டுக்கு சென்று இருந்த தொண்டர்களில் 6 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு விஜய் ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று குடும்பத்தார் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. இந்த நிலையில் தவெக கட்சியின் தலைவர் விஜய் பதிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, 

விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,

வழக்கறிஞர் திரு.  கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்

திரு. JK.விஜய்கலை, 
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்

திரு. வசந்தகுமார், 
கழகத் தோழர்
பாரிமுனை, சென்னை 

திரு. ரியாஸ்,
கழகத் தோழர்,
பாரிமுனை, சென்னை.

திரு. உதயகுமார்,
கழகத் தோழர்,
செஞ்சி

மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 

திரு.சார்லஸ்
கழகத் தோழர்,
வில்லிவாக்கம்,
சென்னை

ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.

கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். 

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


 

Trending News

Latest News

You May Like