விஜய் கட்சி அதிரடி..! தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே..!
மாவட்ட நிர்வாகிகளுக்கான விண்ணப்பத்தில் மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அதில்,
1.கழகத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
2.போட்டியிடுவோர் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
3.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் முழுமையாக நிரப்பப்பட வேண்டு இல்லையெனில் ஏற்கப்படாது.
4.விண்ணப்பப்படிவத்துடன் உறுப்பினர் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
5.கழக மாவட்டம். போட்டியிடும் பதவியை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
6.தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே,
7.கழக விதிப்படி தேர்தல் குழுவின் முடிவே இறுதியானது. தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தலைமை கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.