விஜய் போட்ட முதல் கையெழுத்து..!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது ஆண்டு தொடக்க விழாவிற்கு வந்த விஜய், விழா மேடையில் பிரசாந்த் கிஷோருடன் வந்த விஜயை பார்த்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்காகம் அடைந்து கத்தி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து, தொண்டர்களை பார்த்து விஜய் கையசைத்து, கையெடுத்து கும்பிட்டார்/ தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த #GetOut பேனரில் கையெழுத்து போட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
விஜயை தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகள் என பலரும் கையெழுத்து போட்டனர். இவர்களை தொடர்ந்து, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை புஸ்ஸி ஆனந்த் கையெழுத்து போட அழைக்க, அப்போது பிரசாந்த் கிஷோர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தி ஒதுங்கி நின்றார். அந்த பேனரில் புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் குறித்துகளுடன் #GetOut என்ற வாக்கியமும் குறிப்பிடப்பட்டிருந்தது.